Tue, Jul 29th, 2014 / 08:04:45 AM

விஜய்யின் ‘ஜில்லா’ மதுரையில் தொடங்கியது – வெளியீட்டுத் தேதி எப்போது..?

Share

By G Tamil Cinema Tamil - Wed May 15, 5:36 pm

jillaவிஜய்யின் அடுத்த படமான ‘ஜில்லா’ படப்பிடிப்பு கடந்த திங்கள் அன்று மதுரையில்  தொடங்கியது. கடந்த இரண்டு படங்களாக மும்பையிலேயே தங்கி நடித்துக் கொண்டிருந்த விஜய் தமிழ்நாட்டில் நடிக்கும் படமாக ‘ஜில்லா’ அமைந்திருக்கிறது.

ஆனாலும் மதுரை படப்பிடிப்பில் விஜய் இப்போது கலந்து கொள்ளவில்லை. காரணம், அவரது தேதிகள் இப்போது திட்டமிடப்படவில்லையாம். அதனால் மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பிற நடிகர்கள் இப்போதைய படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜூன் முதல் வாரத்தில் விஜய் கலந்து கொள்வதாக இருக்கிறார். விஜய்யை இயக்கப்போகும் ஆர்வத்தில் இருக்கும் இயக்குனர் நேசன், மதுரையில் தொடங்கியிருக்கும் படப்பிடிப்பு அடுத்து காரைக்குடியில் தொடரவிருப்பதாகக் கூறுகிறார்.

மதுரையில் பெரும்பகுதியும் ஆந்திரா மற்றும் சென்னையில் சில பகுதிகளும் ‘ஜில்லா’வுக்காக படம்பிடிக்கப் படவிருக்கின்றன. சென்னையில் ஒரு பிரமாண்ட செட் ஜில்லாவுக்காகப் போடப்பட்டிருக்கிறது.

பாடல்களுக்காக வெளிநாடு செல்லவிருக்கிறது ‘ஜில்லா’ டீம். திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியும் பட்சத்தில் தீபாவளிக்கே படம் வெளிவருமென்று தெரிகிறது. அல்லது விஜய்க்கு மிகவும் ராசியான பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தெரிகிறது.

 

Gtamilcinema.com - Latest Tamil Cinema News, Photos, Interviews, Trailers